ஆப்கானில் இரு ஹெலிகொப்டர்கள் விபத்து ; 9 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் இரண்டு ஹெலிகொப்டர்கள் விபத்துக்குள்ளானதில் ஒன்பது ஆப்கானிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக புதன்கிழமை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஒரு பெரிய தலிபான் தாக்குதலைத் தடுக்கும் பல முனைகளில் ஆப்கானிய படைகள் மும்முரமாக இருக்கும் ஹெல்மண்ட் மாகாணத்தின் நாவா பகுதியிலேயே இந்த விபத்தானது புதன்கிழமை அதிகாலை ஏற்பட்டுள்ளதாக அந் நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாரே இந்த அனர்த்தத்துக்கான காரணம் என்றும் ஆரம்பக் கட்ட தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.