கொழும்பு களுபோவில வைத்தியசாலையில் குவிந்துள்ள சடலங்கள்

breaking

​கொழும்பு – களுபோவில வைத்தியசாலையின் சவச் சாலையில் குவிந்துகிடக்கும் சடலங்கள் குறித்து பொலிஸார் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சுமார் 27 சடலங்கள் இவ்வாறு சவச்சாலையில் குவிந்திருப்பதாக வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

முறையான மரண விசாரணையின் பின் சம்பந்தப்பட்டவர்களுக்கு சடலங்களைக் கையளிப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்காததினால் சடலங்கள் சவச்சாலையில் குவிந்திருப்பதாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.