பிரதமரின் ஆலோசகராக சமன் வீரசிங்க நியமனம்!

பிரதமரின் ஆலோசகராக வைத்தியர் சமன் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதம் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவினால் நேற்று (01) அலரி மாளிகையில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நியமனம் பெற்றுள்ள வைத்தியர் சமன் வீரசிங்க ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவராக பணியாற்றியுள்ளார்.

அத்துடன், 2010ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருந்த போதும் அவரது ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.