பயணிகள் போக்குவரத்து இடைநிறுத்தும் காலம் நீடிப்பு!

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனமானது, தன பயணிகள் போக்குவரத்துக்கான சேவையை இடைநிறுத்துவதற்கான காலம் 2020 ஏப்ரல் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

எனினும், சரக்கு விமான சேவைகள் அனைத்தும் தொடர்நது இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்டுள்ள பயண கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு, பயணிகள் விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.