
இராஜாங்கனைப் பிரதேசத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளவர்களில், 12 வயது சிறுமி ஒருவருக்கும் கொரோனாத் தொற்றுக்கான அறிகுறி தென்பட்டுள்ளதாக பி.சி.ஆர் பரிசோதனையின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது.
இதன் மூலம், இதுவரை இலங்கையில் கொரோனாத் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2,688 ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.