நல்லிணக்கம் மற்றும் அரசியல் தீர்வு குறித்து சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களுடன் நூலண்ட் சந்திப்பு !

அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் ஏனைய தேசிய இனங்களின்  கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது நல்லிணக்கம் மற்றும் அரசியல் தீர்வுக்கான நம்பிக்கைகள் குறித்து விவாதித்ததாக விக்டோரியா நூலண்ட் தெரிவித்துள்ளார்.

வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கொண்டவர்கள் தீர்வுகளை நோக்கி ஒன்றிணைந்து செயல்படும்போது, ஜனநாயகம் வலுப்பெறும் என்றும் கூறியுள்ளார்.

இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனோ கணேசன், எம்.ஏ சுமந்திரன், ரவூவ் ஹக்கீம், தர்மலிங்கம் சித்தார்தான், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ரிஷாட் பதியுதீன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com