84,328 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுத கொள்முதலுக்கு ஒப்புதல்!

இந்திய ஆயுதப் படைகளின் போர்த் திறனை வலுப்படுத்தும் நோக்கில், 84,328 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்கள், தளவாடங்கள் கொள்முதல் செய்யும் முன்மொழிவுகளுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் சபை நேற்று (வியாழக்கிழமை) இந்த ஒப்புதலை வழங்கியுள்ளது.

இந்திய ராணுவத்துக்கு 6, விமானப் படைக்கு 6, கடற்படைக்கு 10, கடலோர காவல் படைக்கு 2 என மொத்தம் 24 முன்மொழிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதில், தரைப்படைக்கான அதிநவீன போர் வாகனங்கள், இலகு ரக கவச வாகனங்கள், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், பல்நோக்கு வாகனங்கள், புதிய ரக ஏவுகணை அமைப்புகள், வழிகாட்டல் கட்டமைப்புடன் கூடிய குண்டுகள், அதிநவீன கடலோர ரோந்து வாகனங்கள் உள்ளிட்டவை அடங்கும்.

இந்த முன்மொழிவுகளில் 82,127 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்கள், தளவாடங்கள் உள்நாட்டிலேயே கொள்முதல் செய்யப்படவுள்ளதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்திய-சீன எல்லையில் அண்மையில் ஏற்பட்ட மோதலால் இருதரப்பிலும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்த முன்மொழிவுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com