வாக்காளர் அட்டை விநியோகத்துக்கு 2 விசேட தினங்கள்

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகத்திற்கான இரண்டு விசேட தினங்களாக எதிர்வரும் 19 மற்றும் 26 ஆம் திகதிகள், தபால் திணைக்களத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த இரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நாட்களில் வாக்காளர்கள் தத்தமது வீடுகளில் இருந்து தபால் திணைக்களத்தால் விநியோகிக்கப்படும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை கையொப்பத்துடன் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று (13) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 29 ஆம் திகதி வரை இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வாக்காளர்களின் வீடுகளுக்கே வாக்காளர் அட்டைகள் விநியோகம் செய்யப்படவுள்ளன.

இந்த நடவடிக்கைகளுக்காக தபால் திணைக்களத்தின் 75,000 இற்கும் அதிகமான உத்தியோகத்தர்கள், கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 29 ஆம் திகதியின் பின்னர் தபால் ஊழியர்களை பயன்படுத்தி வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட மாட்டாது என பிரதி தபால் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com