காணி பிணக்கினால் தாக்குதல்!

வவுனியா பிரதேச செயலகத்தில் காணிப்பிணக்குக்களை கையாளும் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் காணி உரிமையாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

தாக்குதலில் கணவனும், மனைவியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா பிரதேச செயலகத்தின் காணிப்பிணக்குகளை கையாளுபவரும் அபிவிருத்தி உத்தியோகத்தரான ஒருவரிடமிருந்து 1986ம் ஆண்டு பூவரசங்குளம், கந்தன்குளம் பகுதியிலுள்ள மூன்று அரை ஏக்கர் காணியினை பெற்றுக்கொண்ட நபர் ஒருவர் தனது மனைவியுடன் குறித்த காணியின் பாதை விட்டுக்கொடுப்புக்கள் இடம்பெற்றுவரும் சம்பவங்களை பார்வையிடுவதற்காக நேற்று (12) மாலை அங்கு சென்றிருந்தார்.

இதன்போது குறித்த காணி தொடர்பில் அபிவிருத்தி உத்தியோகத்தருக்கும் காணி உரிமையாருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டு இறுதியில் கைகலப்பாக மாறியது.

இதில் காணியின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவிக்கு காயம் ஏற்பட்டுள்ளதுடன் அவர்கள் இருவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com