மட்டக்களப்பில் 14 வயது சிறுவன் பரிதாப பலி!

மட்டக்களப்பு – கிரான் ஊத்துச்சேனை பிரதேசத்தில் குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் கருணைபுரம் வாழைச்சேனையைச் சேர்ந்த சி.ஜக்ஷன் (14) என்ற சிறுவனே இவ்வாறு இறந்துள்ளார்.

குறித்த சிறுவன் தமது பாட்டியுடன் வசித்து வந்த நிலையில் நேற்று காலை வழமை போன்று தமது கிராமத்தில் உள்ள ஊத்துச்சேனை அரக்கல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது ஆழமான சேற்றுப் பிரதேசத்தில் கால் புதைந்து உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

பிரதேசத்தில் வரட்சியான காலநிலை நிலவுவதால் பிரதேச மக்கள் அனேகமானோர் நீர் உள்ள குளங்களில் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

மேலும் தற்போது சடலம் வாழைச்சேனை ஆதர வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com