புலத்சிங்கள பொலிஸ் கூண்டிலிருந்த தனது எஜமானருக்கு பிணை வழங்க உதவிய நாய்!

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தனது எஜமானரைத் தேடி பொலிஸ் சிறைக் கூண்டுக்கு அருகில் சென்ற நாய்  தொடர்பான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் சிறைக் கூண்டுக்கு அருகில் நாய் ஒன்று நிற்பதனைக் கண்ட பொலிஸார்  அதனை   விரட்டியுள்ளர். இருப்பினும் அந்த நாய் வெளியே செல்லாது பொலிஸ் நிலையத்துக்குள்ளே பதுங்கியிருந்ததுள்ளது.

இதனைக் கண்ட பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டபோது, சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு பொலிஸ் சிறைக்கூண்டில் வைக்கப்பட்டிருந்த நபரின்   வீட்டில் வளர்க்கப்பட்ட   நாய் என்பது  தெரிய வந்துள்ளது.

புலத்சிங்கள பிரதேசத்தில் வைத்து சந்தேக நபரைக் கைது செய்து ஜீப்பில் அழைத்து வரும்போது குறித்த நாயும் சுமார்  கிலோ மீற்றருக்கும் மேலாக ஜீப்பைப் பின்தொடர்ந்து வந்திருந்தமையும் தெரிய வந்துள்ளது.  

பின்னர் அந்த வளர்ப்பு நாய் இரும்புக் கம்பிகள் வழியாக எஜமானைப் பார்த்துக் கொண்டிருந்ததனைப் பொலிஸார் கண்டுள்ளனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com