ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் சட்டமூலத்தை விரைவில் நிறைவேற்றுவோம் – வெளிவிவகார அமைச்சர்

ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் அரசமைப்பு திருத்த சட்டமூலம் அடுத்த சில வாரங்களில் நிறைவேற்றப்படலாம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

புதிய திருத்தம் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சிமுறையை மீள கொண்டுவரும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை சர்வதேசத்தில் காணப்படும் சிறந்தநடைமுறைகளை அடிப்படையாக கொண்டு புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com