யானை தாக்கி மீனவர் உயிரிழப்பு

காட்டு யானையின் சீற்றத்தினால் மட்டக்களப்பில் மீன்  வியாபாரி ஒருவரது உயிர்  காவு வாங்கப்பட்டுள்ளது.

இன்று (03) காலை 6.00 மணியளவில்  மீன் வியாபாரத்தினை மேற்கொள்ளும் முகமாக  தனது வசிப்பிடமான கிண்ணையடி கிராமத்திலிருந்து வியாபாரத்திற்காக பொண்டுகள்சேனை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வேளையில் கிரான் கிராமத்திற்குட்பட்ட ஆதிசிவன் ஆலய வீதி, கருங்காலியடிச்சேனை பகுதியில் காட்டு யானையினால் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சுமார் 42 வயது மதிக்கத்தக்க ஆனந்தன் எனும் 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரனைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com