மே 9 வன்முறைகளுடன் தொடர்புடைய மேலும் நால்வர் கைது

மே 9 வன்முறைகளுடன் தொடர்புடைய நால்வர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த மே 9 ஆம் திகதி இடம்பெற்ற அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் பின்னர் நடைபெற்ற வன்முறைகளுடன் தொடர்புடைய நால்வர் குளியாப்பிட்டிய மற்றும் நால்ல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

குறித்த சந்தேக நபர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களான சமன்பிரிய ஹேரத் மற்றும் கோகிலா  ஹர்ஷணி குணவர்தன அவர்களுடைய வீடுகள், கட்சி காரியாலங்கள் மற்றும் வாகனங்கள் என்பனவற்றிற்கு தீ மூட்டியமை மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவர்கள் 19,22, 30 மற்றும் 42 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் மஹலந்த, இஹல எலதலாவ, மீரிகம மற்றும் லொலுவாகொட பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

சம்பவம் தொடர்பில் குளியாப்பிட்டிய மற்றும் நால்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com