யாழில் மரக்கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் கைது

அனுமதி இன்றி கப் ரக வாகனத்தில் பனைமரங்களை ஏற்றிவந்த அறுவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், காரைநகர் மற்றும் அல்லைப்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பனைமரங்களை ஏற்றிவரும்வேளை பொன்னாலை பகுதியில் வைத்து சனிக்கிழமை (13) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாகன சாரதி மாத்திரம் வாகனத்தில் வந்தநிலையில் ஏனையோர் மோட்டார் சைக்கிள்களில் வந்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் மற்றும் பனைமரங்களுடன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com