இலங்கையின் எரிபொருள் நெருக்கடி – கட்டார் எரிசக்தி துறை அதிகாரிகளுடன் காஞ்சன விஜேசேகர கலந்துரையாடல்

இலங்கையின் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கட்டாரின் எரிசக்தி துறையின் முக்கிய அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்

இது குறித்து தனது டுவிட்டர் தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எரிசக்தி விவகார இராஜாங்க அமைச்சரும் கட்டார் எரிசக்தியின் தலைவரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சாட் ஷெரிடா அல்-காபியை இன்று சந்தித்துள்ளார்.

இதன்போது எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு பெட்ரோலிய பொருட்கள், திரவமாக்கப்பட்ட பெற்றோலிய வாயு (LPG), மற்றும் திரவ இயற்கை எரிவாயு (LNG) வழங்குவது குறித்து கலந்துரையாடப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

அத்தோடு, கட்டார் எரிசக்தி மற்றும் கட்டார் அபிவிருத்தி நிதியத்தின் உதவியுடன் இலங்கையின் எரிசக்தி நெருக்கடியை சமாளிக்கும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக அமைச்சர் கூறினார்.

இந்நிலையில், சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட்டுடன் அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று அதிகாலை கட்டார் நோக்கிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com