லெபனானில் 3 மாடி கட்டிடம் இடிந்ததில் குழந்தை உயிரிழப்பு ; பலர் காயம்

லெபனான் நாட்டின் வடக்கே குய்பே மாவட்டத்தின் திரிபோலி நகரில் 3 மாடி கட்டிடம் ஒன்று திடீரென நேற்று இடிந்து விழுந்துள்ளது. 

இச்சம்பவத்தில் சிக்கி குழந்தை ஒன்று உயிரிழந்தது. 

பலர் காயமடைந்துள்ளனர். கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் தெரிய வரவில்லை. இதுபற்றிய தகவல் அறிந்து மீட்பு குழுவினர் சம்பவ பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் காயமடைந்த நபர்களை மீட்டனர். 

பின்னர் உள்ளூர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அந்நபர்களை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லெபனான் நாட்டு பிரதமர் பொறுப்பு வகிக்கும் நஜீப் மிகாடி, காயமடைந்த நபர்களுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை வழங்கும்படி உள்ளூர் வைத்தியசாலைகளை கேட்டு கொண்டார். அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com