காளைச் சண்டை போட்டியில் பார்வையாளர் கலரி உடைந்து கோர விபத்து – 6 பேர் பலி

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் காளைச் சண்டை போட்டியின் போது பார்வையாளர்கள் கலரி உடைந்து விழுந்து நொறுங்கியதில் 200 பார்வையாளர்கள் படுகாயமடைந்தனர்.

எல் எஸ்பினல் நகர மைதானத்தில் நடைபெற்ற காளைச் சண்டை போட்டியில் மூங்கில் மற்றும் தென்னம் பலகைகளை கொண்டு பார்வையாளர்கள் கலரி அமைக்கப்பட்டது.

போட்டி நடந்து கொண்டு இருந்த நிலையில், பாரம் தாங்காமல் கலரி உடைந்து விழுந்தது. 

விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 200 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com