பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு !

இன்று (24) நள்ளிரவு முதல் இ.போ.ச. மற்றும் தனியார் பஸ்கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பஸ் கட்டம் 25 சத வீதம் முதல் 30 சத வீதம் வரை அதிகரிக்கப்பட வேண்டுமென அகில இலங்கை தனியார் பஸ் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், பஸ் கட்டணம் 19.5 சதவீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஆரம்ப பஸ் கட்டணம் 32 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com