புகையிரதத்துடன் கப் ரக வாகனம் மோதி விபத்து- யாழில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்துடன் கப் ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

யாழ்ப்பாணம்- மிருசுவில் பகுதியில், இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் கப் ரக வாகன சாரதி படுகாயமடைந்ததுடன், வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது.

மேலும் விபத்தில் காயமடைந்த சாரதி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.