கொரோனா தொற்றாளர் எவரும் அடையாளம் காணப்படவில்லை….!

நாட்டில் கொவிட் -19 தொற்றிலிருந்து மேலும் 65 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இதற்கமைய தொற்றுலிருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1122 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதேநேரம், இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் இரண்டு பேருக்கு கொரோணா தொற்றுறுதியாகியுள்ளது.

இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1861 ஆக அதிகரித்துள்ளது.

728 பேர் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 608ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிக்கு பின்னர் கொழும்பில் எந்தவொரு கொரோனா தொற்றாளரும் அடையாளம் காணப்படவில்லை என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.