கொரோனாவால் திமுக எம்எல்ஏ மரணம்!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் இன்று (10) உயிரிழந்துள்ளார்.

பல நாட்களாக அவர் உயிருக்குப் போராடிய நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

தனது 62வது பிறந்த நாளான இன்று அவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.