வெள்ளை வான் ஊடக சந்திப்பு; ராஜிதவுக்கு பிணை!

வெள்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று (10) கொழும்பு மேலதிக நீதிவான் பிரியந்த லியனகே முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் ராஜித தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு உத்தரவாதப் பிணையில் விடுவிக்க நீதிவான் உத்தரவிட்டார்.