புதிய அரசியலமைப்பு மற்றும் மீனவர்கள் பிரச்சினை குறித்து பேச்சு

புதிய அரசியலமைப்பு மற்றும் மீனவர்கள் பிரச்சினை குறித்து இந்திய உயர்ஸ்தானிகருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கலந்துரையாடியுள்ளார்.

நேற்று சம்பந்தனுடைய கொழும்பு இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் தூதரகத்தின் முதலாவது செயலாளர் திருமதி.பானு பிரகாஷ் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.

சம்பந்தனுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்த இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே பல முக்கிய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடியிருந்தார்.

மேலும் இந்த சந்திப்பில் வடக்கு கிழக்கில் இந்திய முதலீடுகள் மற்றும் உதவித் திட்டங்கள் குறித்தும் பேசப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com