யாழில் மழையுடனான காலைநிலை நீடிக்க கூடும் என எதிர்வு கூறல்!

யாழ்.மாவட்டத்தில் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக கடந்த 48 மணி நேரத்திற்குள் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 10 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு வீடு முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளது.

யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என்.சூரியராஜ் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்டஜே 141, 142 ஆகிய கிராம சேவகர் பிரிவுக்குட்பட்பட்ட பகுதிகளிலேயே மழையுடன் கூடிய காலநிலையினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டோரின் விபரங்கள் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் ஊடாக பெற்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த மழையுடனான காலநிலையானது மறு அறிவித்தல் வரை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்..

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com