நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் – மக்களே அவதானம்!

இலங்கையின் கிழக்குக் கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்பில் குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது  நிலை கொண்டுள்ளது.

இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படும் என அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பெய்யுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதோடு, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com