கோவேக்ஸின் தடுப்பூசி குறித்து கூடுதல் விளக்கங்களை கோரும் உலக சுகாதார அமைப்பு!

கோவேக்ஸின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிப்பதற்கு கூடுதல் விளக்கங்களை உலக சுகாதார அமைப்பு கோரியுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பக் குழுக் கூட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதன்போதே கூடுதல் விளக்கங்கள் கேட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தடுப்பூசி கொரோனா தொற்றுக்கு எதிராக 77.8 சதவீதம் புதிய டெல்டா வகை தொற்றுக்கு எதிராக 65.2 சதவீத செயல் திறனை கோவேக்ஸின் தடுப்பூசி கொண்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.