காஷ்மீரில் இணைய சேவைகள் முடக்கம்!

காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்கும் முகமாக அங்கு இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காஷ்மீர் மண்டல காவல்துறை அதிகாரி விஜய் குமார், சில இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இது வழக்கமான பயங்கரவா தடுப்பு நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகரில் கடந்த வாரம் வெளிமாநில தொழிலாளர்கள் கொல்லப்பட்ட பகுதிகளில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், 12 இற்கும் மேற்பட்ட தொலைத்தொடர்பு கோபுரங்களின் இணை சேவை முடக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com