20 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் வவுனியாவில் நடைபாதை அமைக்கும் பணி ஆரம்பம்!

20 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வவுனியாவில் நடைபாதை அமைக்கும் பணி நகரசபையினரால் சில தினங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.இலங்கையின் நூறு நகரங்களை அழகுபடுத்தும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் திட்டத்தின் கீழ் வவுனியா நகரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.அந்தவகையில் முதற்கட்டமாக வவுனியா மணிக்கூட்டு கோபுரசந்தியில் இருந்து, பொதுவைத்தியசாலை சுற்றுவட்டம் வரையான வீதிக்கரையில் அதனை அமைப்பதற்கான திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இருபது மில்லியன் ரூபாய் நிதியில் நகரசபையின் மேற்பார்வையில் துரிதமாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் நகசபை தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com