தமிழகத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்- வாக்கு எண்ணும் நடவடிக்கை ஆரம்பம்

தமிழகத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் நடவடிக்கை, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு ஆரம்பமாகியது.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா ஊடாக  கண்காணிக்கப்படுகிறது.

ஒரு வேட்பாளருக்கு ஒரு ஏஜெண்டு என்ற அடிப்படையில் வாக்கு எண்ணிக்கையின்போது வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், வாக்கு சீட்டுகளில் ஏதேனும் திருத்தம் செய்து விடக்கூடாது என்பதற்காக ஏஜெண்டுகள் பேனா கொண்டு செல்ல அனுமதியில்லை. பதிவான வாக்குகளை குறிப்பதற்காக பென்சில் மட்டுமே கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தவிர தண்ணீர் போத்தல், தொலைப்பேசி உள்ளிட்ட வேறு எந்த பொருட்களையும் கொண்டுச் செல்வதற்கு அனுமதி கிடையாது.

தேர்தல் முடிவை அறிவிக்கும்போது பல இடங்களில் மோதல்கள் நடப்பதற்கு வாய்ப்புள்ளமையினால், வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர்,  திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் கடந்த 6 மற்றும் 9 ஆம் திகதிகளில் இரு கட்டங்களாக ஊரக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com