பிரித்தானியாவில் வேலை வாய்ப்பு காலியிடங்களின் எண்ணிக்கை சாதனை அளவை எட்டியுள்ளது!

பிரித்தானியாவில் வேலை வாய்ப்பு காலியிடங்களின் எண்ணிக்கை சாதனை அளவை எட்டியுள்ளதாக, சமீபத்திய அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

ஜூலை முதல் செப்டம்பர் வரை காலியிடங்கள் 1.1 மில்லியனை எட்டியுள்ளதாக, தேசிய புள்ளிவிபர அலுவலகம் தெரிவித்துள்ளது. இது 2001ஆம் ஆண்டு பதிவுகள் தொடங்கியதிலிருந்து மிக உயர்ந்த நிலை ஆகும்.

காலியிடங்களில் மிகப்பெரிய அதிகரிப்பு சில்லறை வணிகம் மற்றும் மோட்டார் வாகன பழுது ஆகியவற்றில் உள்ளது.

தொற்றுநோய்க்கு முந்தைய 4 சதவீதத்துடன் ஒப்பிடும்போது பிரித்தானியாவின் வேலையின்மை வீதம் 4.5 சதவீதம் என மதிப்பிடப்பட்டது.

ஓ.என்.எஸ். சம்பளப் பட்டியலில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை மற்றொரு மாதாந்திர அதிகரிப்பைக் காட்டியது, செப்டம்பரில் 207,000 உயர்ந்து சாதனை 29.2 மில்லியனாக இருந்தது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com