யாழ்ப்பாணம் – எழுதுமட்டுவாள் பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

யாழ்ப்பாணம் – தென்மராட்சி எழுதுமட்டுவாள் பகுதியில் சாவகச்சேரி மதுவரி நிலையத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 820 லீட்டர் கோடவும், உற்பத்தி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேற்படி பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றது.

உதவி மதுவரி ஆணையாளர் தர்மசீலன், மதுவரி அத்தியட்சகர் தங்கராசா ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய நிலைய பொறுப்பதிகாரி ராஜ்மோகன் தலைமையிலான மதுவரி உத்தியோகத்தர்கள் இன்று மாலை திடீர் சுற்றிவளைப்பு மேற்கொண்டனர்.

இதன் போதே கோடாவும், உற்பத்தி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.