கொவிட்-19: கனடாவில் கொவிட் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,089பேர் பாதிப்பு- ஐந்து பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 2,089பேர் பாதிக்கப்பட்டதோடு ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 16இலட்சத்து நான்காயிரத்து 468பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 27ஆயிரத்து 654பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 45ஆயிரத்து 080பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 638பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 15இலட்சத்து 31ஆயிரத்து 734பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com