கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைப்பதில் தாமதம்!

கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதாரா அமைப்பு அங்கீகாரம் வழங்குவது மேலும் தாமதமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த  அங்கீகாரம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கு தொழில்நுட்ப ரீதியான சில விளக்கங்களைக் கேட்டு உலக சுகாதார அமைப்பு திருப்பி அனுப்பியுள்ளதால் தாமதம் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தடுப்பூசிக்கு அனுமதி கிடைக்கப்பெறும் பட்சத்தில் இதனை செலுத்திக் கொண்ட மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல தடை இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com