ஆகாஷ் ஏவுகணை பரிசோதனை வெற்றி!

ஆகாஷ் ப்ரைம் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக டி.ஆர்.டி.ஓ அறிவித்துள்ளது.

தரையில் இருந்து ஆளில்லா விமானங்களை தாக்கும் திறன்  கொண்ட இந்த ஏவுகணை, ஒடிசாவில் சந்திப்பூரில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆளில்லாத ட்ரோனை குறித்த ஏவுகணை தாக்கி அழித்ததாக டி.ஆர்.டி.ஓ தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு இந்த ஏவுகணையை உருவாக்கியுள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com