கொரோனா தொற்றில் இருந்து மேலும் 743 பேர் பூரண குணம்!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 743 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 56 ஆயிரத்து 87 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592 ஆக பதிவாகியுள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 731 ஆக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com