கொற்கை அகழாய்வு – குதிரை சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

கொற்கை அகழாய்வு பணியின்போது, சுடுமண்ணால் செய்யப்பட்ட குதிரை சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கொற்கையில் கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி தொல்லியல் அகழாய்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

ஆறு மாதமாக நடைபெற்று வரும் இந்த பணியில் 500 இற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக 9 அடுக்குகள் கொண்ட திரவப்பொருட்கள், வடிகட்டும் குழாய், செங்கல் கட்டுமான அமைப்புகள் என ஏராளமான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

இந்நிலையில், 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை, துறைமுகமாகவும், குதிரை ஏற்றுமதி இருந்ததை உறுதிப்படுத்தும் விதமாக குதிரை முகம் கொண்ட சுடுமண் சிற்பங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

அதே போன்று, பெண்ணின் சுடுமண் சிற்பங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது போன்ற பொருட்கள் வரலாற்றை தொடர்ந்து வெளியில் காட்டிக் கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.