இந்தியா – கனடா இடையே நேரடி விமான சேவை!

இந்தியா – கனடா இடையிலான நேரடி விமான சேவை இன்று(திங்கட்கிழமை) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றது.

ஏப்ரலில் கொரோனா 2ஆம் அலை இந்தியாவில் தீவிரமடைந்திருந்த நிலையில், கனடா நேரடி விமான சேவைக்கு தடை விதித்திருந்தது.

தற்போது நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துவருவதால், மீண்டும் விமானத்தை இயக்குவதற்கு கனடா அரசு அனுமதியளித்துள்ளது.

இந்நிலையில் டெல்லி – டொரொன்டோ இடையே ஏர் இந்தியா, ஏர் கனடா விமானங்கள் இன்று முதல் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயணத்திற்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என கனடா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.