7 அதிசயங்களை விடவும் அதிக சிறப்புக்களை கொண்டது தஞ்சை பெரிய கோயில்!

உலகின் 7அதிசயங்களை விடவும், அதிக சிறப்புகளைக் கொண்டது தஞ்சை பெரிய கோவில் என மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் தெரிவித்துள்ளார்.

தஞ்சை பெரிய கோயிலில் சிறப்பு அனுமதி பெற்று அவர் நேற்று வராஹி அம்மன், பெருவுடையாரை தரிசனம் செய்து வழிபட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பெரிய கோவிலின் சிறப்புக்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நமது கடமையாகும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.