எதிர்காலத்தில் சந்தையில் அரிசியின் விலை அதிகரிக்கும்

எதிர்காலத்தில் சந்தையில் அரிசியின் விலை அதிகரிக்கும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இதனை தெரிவித்தார்.

சந்தையில் அரிசி தட்டுப்பாடு நிலவும் நேரத்தில் உரத்தின் இறக்குமதியை அரசாங்கம் கட்டுப்படுத்தியுள்ளதால் நெல் அறுவடை குறையும் என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை சந்தையில் எரிவாயு மற்றும் பால்மா போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.