தேர்தல் முறைமை சீராக்கல் தொடர்பான தெரிவுக்குழுவின் அறிக்கை நவம்பரில் ஜனாதிபதியிடம்!

தேர்தல் முறைமை சீராக்கல் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்த குழுவிடம் பல அரசியல் கட்சிகள் தமது பரிந்துரைகளை முன்வைத்திருந்தார்.

அதனடிப்படையில் தயாரிக்கப்படும் அறிக்கை ஜனாதிபதியிடம் எதிர்வரும் நவம்பர் மாத இறுதியில் கையளிக்கப்படவுள்ளது.

அதேநேரம் இந்த மாதம் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் இந்தக் குழு மீண்டும் கூடவுள்ளது.