எரிமலை வெடிப்பு காரணமாக லா பால்மா தீவில் விமான சேவைகள் இரத்து!

கடந்த சில தினங்களாக ஸ்பெயினில் உள்ள லா பால்மா தீவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டு, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

தற்போது கும்ரே வியெகா எரிமலையின் வெடிப்பு தீவிரமடைந்து வருவதால், லா பால்மா தீவில் உள்ள விமான நிலையம் மூடப்பட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய கும்ரே வியெகா எரிமலை வெடிப்பினால் இதுவரை 350 வீடுகள் அழிந்துள்ளன.

ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவு வரை எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட புகை சூழ்ந்துள்ளது.