முன்பள்ளி ஆசிரியர் கொலை : சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது

தென்கிழக்கு லண்டன் முன்படசாலை ஆசிரியரின் மரணம் குறித்து விசாரணை நடத்திய பொலிஸார் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளனர்.

38 வயதான ஒருவர் கிழக்கு சசெக்ஸில் கைது செய்யப்பட்டார் என ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் 17 ஆம் திகதி நண்பரைச் சந்திக்க நடந்து சென்றுகொண்டிருந்தபோது 28 வயதான குறித்த ஆசிரியர் தாக்கப்பட்டார்.

கொலையில் சந்தேகத்தின் பேரில் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.