கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட பி.சி.ஆர்.சோதனை நிலையம்

வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோருக்கு இன்று (சனிக்கிழமை) முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர்.சோதனைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

3 மணித்தியாலங்களில் பிசிஆர் பெறுபேற்றை பெற்று கொடுக்கும் நோக்கில் அண்மையில் மத்திய நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஆய்வுக்கூட கட்டமைப்பின் ஊடாக மணித்தியாலத்திற்கு 500 பி.சி.ஆர். முடிவுகளையும் நாளொன்றில் 7 ஆயிரம் முடிவுகளையும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்க்பட்டுள்ளது.

முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த பரிசோதனைகளுக்காக சுற்றுலா பயணிகளிடம் இருந்து 40 டொலர் கட்டணம் அறவிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com