யாழ்ப்பாணம்- அராலியில் விபத்து: மூவர் வைத்தியசாலையில் சிகிச்சை

யாழ்ப்பாணம்- அராலி தெற்கு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, அராலி மத்தியில் வசிக்கும் நபர் ஒருவர், தனது குடும்பத்தினருடன் பேரூந்தில் பயணம் மேற்கொண்ட வேளையில், பேருந்தானது மரம் ஒன்றுடன் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

இதில் 6 பேர் பயணித்த நிலையில் ஒருவர் படுகாயமடைந்ததுடன் மற்றைய இருவர் சாதாரண காயங்களுக்கு உள்ளாகினர்.

இந்நிலையில் காயமடைந்த அவர்களை, யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக ஏனையோர் அனுமதித்தனர்.

மேலும், பேருந்தானது வேகக்கட்டுப்பாட்டினை இழந்தமையே விபத்திற்கான காரணம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.