அவுஸ்ரேலியா நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டது: பிரான்ஸ் சாடல்!

அவுஸ்ரேலியா நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டதாக பிரான்ஸ் அரசாங்கம் கடுமையாக சாடியுள்ளது.

முக்கியத்தும் வாய்ந்த ஆக்கஸ் (யுருமுருளு) என்று அழைக்கப்படும் கூட்டுத் திட்டத்தில், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் இணைந்துள்ளதன் பின்னணியில் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் நேவல் குழுமத்திடமிருந்து அணு ஆற்றலால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல வாங்க அவுஸ்ரேலியா ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தம் நிமித்தமாகக் கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்தே பிரான்ஸ், ஆஸ்திரேலியா நாடுகள் தரப்பில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில், திடீரென பிரித்தானியாவுடன் கைகோர்த்த அவுஸ்ரேலியா தனக்குத் தேவையான நீர்மூழ்கிக் கப்பல்களை அமெரிக்காவிடமிருந்து வாங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இது குறித்து பிரான்ஸ் நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜீன் யிவெஸ் லே ட்ரியன் கூறுகையில், ‘இது முதுகில் குத்தும் செயல். நாங்கள் அவுஸ்ரேலியா மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தோம். ஆனால் அவர்கள் துரோகம் செய்துவிட்டனர்.

நான் இன்று மிகவும் ஆத்திரத்தோடும், கசப்புணர்வோடும் இருக்கிறேன். நட்பு நாடுகளாக இருப்போர் ஒருவொருக்கொருவர் இத்தகைய செயலை செய்து கொள்ளக் கூடாது’ என கூறினார்.

பிரான்ஸுடன் அவுஸ்ரேலியா மேற்கொண்டிருந்த ஒப்பந்தம் 50 பில்லியன் அவுஸ்ரேலியா டொலர்கள் மதிப்பிலானது.

புதிய கூட்டு மூலம் அவுஸ்ரேலியாவுக்கு முதல் முறையாக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் வாய்ப்புக் கிடைக்கும்.

இந்தக் கூட்டுத் திட்டம், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பங்கள் மற்றும் சைபர் தொழில்நுட்பம் ஆகியவற்றையும் கொண்டிருக்கும்.

இந்த உடன்பாட்டில் பங்கேற்பதற்காக, பிரான்ஸ் நாட்டால் வடிவமைக்கப்படும் நீர்மூழ்கியை உருவாக்கும் ஒப்பந்தத்தை அவுஸ்ரேலியா இரத்து செய்திருக்கிறது.

அவுஸ்ரேலிய கடற்படைக்கு 12 நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்க பிரான்ஸ் ஒப்பந்தத்தைப் பெற்றிருந்தது. இது அவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய ஆயுதத் தளவாட ஒப்பந்தமாகும்.

ஆனால், இந்த ஒப்பந்தப்படி நீர்மூழ்கிகளை உருவாக்குவதற்கான தளவாடங்கள் பெரும்பாலும் உள்நாட்டிலே பெற வேண்டும் என்பதால், இந்தத் திட்டம் தாமதமாகிக் கொண்டிருந்தது. தற்போது அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளுடன் அவுஸ்ரேலியா இணைந்துள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com