தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைப் பெய்யக்கூடும் என சென்னை மண்டல ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அம்மையத்தின் இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிவிப்பில், ‘தென்மேற்கு பருவக் காற்று மற்றும் வெப்பசலனம் காரணமாக தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பதிவாகும்.

சென்னையைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com