கைக்குண்டு மீட்பு விவகாரம் – மற்றுமொருவர் கைது

கொழும்பு – நாரஹேன்பிட்டி பகுதியிலுள்ள லங்கா வைத்தியசாலை வளாகத்திலுள்ள மலசலக்கூடத்திலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குருணாகல், மஹவ பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றவியல் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமையவே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், இச்சம்பவம் தொடர்பில் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை, கொழும்பு 07 விஜேராம மாவத்தையிலுள்ள அமைச்சரொருவரின் வீட்டில் இருந்தே தான் குறித்த கைகுண்டை கொண்டுவந்ததாக முதலாவதாக கைது செய்யப்பட்ட திருணோமலை பகுதி இளைஞர் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், அவரின் வாக்குமூலம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com