ரிஷாட்டின் மனைவி – மாமனாருக்கு பிணை!

விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மனைவி மற்றும் மாமனாருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

டயகம சிறுமி ஹிஷாலியின் மரணம் தொடர்பான வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுக்கப்பட்டபோதே இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி வரையில் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com