நாட்டிற்கு ஒரு மில்லியன் சினோவெக் தடுப்பூசிகள்!

சீன அரசாங்கம் இலங்கைக்கு 01 மில்லியன் டோஸ் சினோவெக் கொரோனா தடுப்பூசியை வழங்க தீர்மானித்துள்ளது.

இலங்கைக்கான சீன தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது.

இலங்கை தனது தடுப்பூசி வேலைத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் குறித்த தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.

சினோவெக் உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் தடுப்பூசி ஆகும்.

ஓகஸ்ட் இறுதி வரை சுமார் 50 நாடுகளில் 1.8 பில்லியன் டோஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதில் 1.4 பில்லியன் டோஸ்கள் ஏற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com